Translate

செவ்வாய், 20 நவம்பர், 2012

சுக்கா சப்பாத்தி

            
தேவையான பொருட்கள்;:


கோதுமை மாவு
2 கப்;(குவித்து)
தண்ணீர்;
மாவை பிசைவதருக்கு தேவையான அளவு
பொடி உப்பு
விருப்பமானால்
எண்ணெய்
 2  டீ ஸ்பூன்

கலோரி அளவு:


1  புல்கா          73 கலோரி


கிடைக்கும் அளவு:

14 சாப்பாதிகள்


செய்முறை:
1.   மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
2.   அதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து மிருதுவாகப்பிசைந்து   கொள்ளவும்
3.   பலமுறை நன்றாக அடித்துப் பிசையவும் (குறைந்தது 10 முதல் 15 நிமிடம் வரை)
4.   4 (அ) 5 மணி நேரம் மூடிவைக்கவும்.
5.   14 சம அளவு உருண்டைகள் செய்யவும்.
6.   தோசைக் கல்லை காயவைத்து, சப்பாத்தியை அதன் மீது போடவும்.
7.   லேசாகப் பொங்கிவரும் போது திருப்பிப் போடவும்.
8.   அடிப்பாகம் நன்றாக ப்ரொவ்ன் நிறம் ஆனதும் சப்பாத்தியைத் திருப்பி மேல் பாகத்தை              

      நேரிடையான அனலில் காட்டவும். (ஸ்டோவ்வின் மீது கம்பி வலை உபயோகிக்கலாம்.
9.   பூரியைப் போல் பொங்க ஆரம்பித்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
10. சப்பாத்தியை ஒரு முறை கையினால் லேசாகக் கசக்கி முக்கோணமாக மடித்து மெல்லிய 

      துணி விரிக்கப்பட்டு உள்ள பெட்டியில் மூடி வைக்கவும்.
11. விருப்பமானால் மடிப்பதற்கு முன் ஒரு பக்கம் சிறிது நெய் தடவலாம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக