Translate

வெள்ளி, 23 நவம்பர், 2012

புளியில்லா குழம்பு


தேவையான பொருட்கள்;

பயத்தம் பருப்பு   
3/4 கப்
கத்தரிக்காய்
1/4 கிலோ
மிளகாய்த் தூள்    
3/4 டீ ஸ்பூன்
சோம்புத் தூள்      
1/4 டீ ஸ்பூன்
உப்பு                
தேவையான அளவு
மஞ்சள் தூள்        
1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை
சிறிது

தாளிக்க:
எண்ணைய்
2  டீ ஸ்பூன்
கடுகு
¼  டீ ஸ்பூன்

அரைத்துக் கொள்ளவும்:
துறுவிய தேங்காய்
1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்
1/2
சீரகம்
½  டீ ஸ்பூன்

செய்முறை:

1) கத்தரிக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2) பருப்பைக் கழுவி போதிய நீர், நறுக்கிய காய்கறித் துண்டுகள் சேர்த்து வேக விடவும்.
3) பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.
4) கடைசியில் அரைத்த விழுது சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
5) வாணலியில் சிறிது எண்ணையைச் சூடக்கி கடுகு சேர்த்து பொரிந்ததும் சோம்புத் தூள் சேர்த்து பருப்பில் கலந்து கொள்ளவும்.
6) அடுப்பிலிருந்து இறக்கிய பின் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக