Translate

பணியாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணியாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 மே, 2013

ரவை பணியாரம்



தேவையான பொருட்கள்
மைதா
1 கப்
ரவை
1 கப்
சர்க்கரை
1 கப்
பால்
1 கப்
எண்ணெய்
சுடுவதற்கு
ஏலக்காய் பொடி
ருசிக்கேற்ப
சமையல் சோடா
1/4 டீ ஸ்பூன்

செய்முறை:
1. ரவை, மைதா, சர்க்கரை இவற்றை பாலோடு கலந்து வைக்கவும்.
2. ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தேவையானால் இன்னும் சிறிது பால் சேர்க்கவும்.
3. ஊற்றுவதற்கு முன் ஏலக்காய்ப் பொடி, சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.
4. பணியாரக் கல்லை காயவைத்து ஒவ்வொரு குழியிலும் 1/2 குழிமாவு ஊற்றவும்.
5. மிதமான அனலில் வேகவிட்டு, ஒரு தட்டையான கரண்டியால் கவனமாக ஓரங்களை எடுத்து விட்டு திருப்பிப் போடவும்.

ஜவ்வரிசி பணியாரம்



தேவையான பொருட்கள்:
பச்சரிசி
3 கப்
ஜவ்வரிசி
1 கப்
பச்சை மிளகாய்
12
கொத்தமல்லி
2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பில்லை
2 டேபிள் ஸ்பூன்
புளிப்புத் தயிர்
2 கப்
சிறிய வெங்காயம் 
1/2 கப்
இஞ்சி
1 டேபிள் ஸ்பூன்
உப்பு
2 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:        
1. அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளாகாயையும் உப்பையும் சேர்த்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. கழுவிய ஜவ்வரிசியையும், புளிப்புத் தயிரையும்அரைத்த கலவையோடு சேர்க்கவும்.
3. 6 முதல் 8 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
4. பொடியாக நறுக்கிய வெங்காயம், நீரில் ஊறவைத்த கடலைப் பருப்பு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பில்லை சேர்க்கவும். நன்றாகக் கலந்து, பணியரக் கல்லை காயவைத்து ஊற்றவும்.

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

அரிசி அவுல் பணியாரம்



தேவையான பொருட்கள்:
பதப்படுத்திய அரிசி மாவு
2 கப்
பொடியாக்கிய அரிசி அவுல்
1/2 கப்
புளித்த கெட்டித்தயிர்
மாவு பிடிக்கும் அளவு
உப்பு
1 1/2 டீ ஸ்பூன்
அரிந்த சிறிய வெங்காயம்
1/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
10
கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. பொடியாக்கிய அரிசி அவுல், அரிசி மாவு இவற்றை தயிரில் கலக்கவும். 8 முதல் 10 மணி நேரம் வரை மூடிவைக்கவும்.
2. தண்ணீரில் ஊறவைத்த கடலைப் பருப்பு, மற்ற பொருட்களை சேர்க்கவும்.
3. பணியரக் கல்லில் ஊற்றி எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

அரிசி பணியாரம்



தேவையான பொருட்கள்:
பச்சரிசி
1 கப்
புழுங்கலரிசி
1 கப்
உளுத்தம் பருப்பு
1/2 கப்
பச்சை மிளகாய்
8
உப்பு
2 டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம்
2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
கறிவேப்பில்லை
1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை
1 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா
1/4 டீ ஸ்பூன்
கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. பருப்பை தனியாக 1 மணி நேரமும், அரிசி வகைகளை ஒன்றாக 2 மணி நேரமும் ஊற வைக்கவும்.
2. பருப்பை முதலில் நுரைக்க அரைத்துக் கொள்ளவும்.
3. அரிசியுடன் பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. அரிசியையும், பருப்பு விழுதையும் கலந்து உப்பு சேர்த்து மறுநாள் காலைவரை வைக்கவும்.
5. வெங்காயம், கடலை பருப்பு, கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை சமையல் சோடா இவற்றை மாவோடு சேர்க்கவும்.
6. நன்றாகக் கலந்து பணியாரக் கல்லில் ஊற்றவும்.