Translate

டிபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டிபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 அக்டோபர், 2015

பொங்கல்


தேவையான பொருட்கள்:
பச்சரிசி  
  1 கப்

பாசி பருப்பு       
1/2 கப்

மிளகு
1/4 டீ ஸ்பூன்
சீரகம்
1/4 டீ ஸ்பூன்
சிகப்பு மிளகாய்   
3
கருவேப்பில்லை
சிறிதளவு
இஞ்சி
சிறிதளவு
பெருங்காயம்
  தேவைக்கேற்ப

முந்திரி   
10 அல்லது 15
எண்ணெய் அல்லது நெய்  
தேவைகேற்ப

உப்பு
தேவையான அளவு
தண்ணீர்
4 அல்லது 5 கப்



செய்முறை:

1. ஒரு வாணலியில் அரிசி,பருப்பு இரண்டையும் சேர்த்து வருக்கவும். அரிசி லேசாக பொரிந்ததும் இறக்கவும்.
2. ப்ரெஶர் குக்கரில் பழைய அரிசியாக இருந்தால் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இல்லையென்றால் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரிசி, பருப்பு, உப்பு 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
3. வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி மிளகு, சீரகம், சிகப்பு மிளகாய், முந்திரி, துருவிய இஞ்சி, பெருங்காயம், சேர்த்து தாளிக்கவும்.
4 வேக வைத்த அரிசி,பருப்பு இரண்டையும் நன்றாக குழைத்து கொள்ளவும். தாளித்தவைகளுடன் சேர்த்து சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

வியாழன், 24 ஏப்ரல், 2014

ஸ்டஃப்ட் இட்லி


தேவையான பொருட்கள்:
கேரட்
1
பீன்ஸ்
10
உருளைகிழங்கு
1
இஞ்சி பூண்டு விழுது
1/.4 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள்
1/.4 டீ ஸ்பூன்
உப்பு
1/.4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்
1/.4 டீ ஸ்பூன்
இட்லி மாவு
தேவையான அளவு

செய்முறை:
1. கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு மூன்றையும் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
2. சூடு ஆரிய பிறகு மூன்றையும் தண்ணீர் இல்லாமல் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. பிறகு மசித்த காய்கறி விழுது, மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
5. இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி, காய்கறி மசாலா விழுதை வைத்து இட்லி மாவை ஊற்றவும்.
6. 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

செவ்வாய், 11 மார்ச், 2014

ஓட்ஸ் தோசை


தேவையான பொருட்கள்:
ஓட்ஸ்
2 கப்
ரவா
1 கப்
அரிசி மாவு
3/4 கப்
கோதுமை மாவு
1/2 கப்
மைதா மாவு
1/2 கப்
பச்சை மிளகாய்
5
உப்பு
1/2 டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது
1/4 டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம்
1
கேரட்
துருவியது சிறிதளவு
புளித்த தயிர்
1/2 கப்
தண்ணீர்
தேவையான அளவு

செய்முறை:
1. ஒரு வாணலியில் ஓட்ஸ், ரவா, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்..
2. சூடு ஆறியதும் மிக்ஸீயில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
3. பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட் மிக்ஸீயில் அரைத்த ஓட்ஸ், ரவா மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
4. அதனுடன் புளித்த தயிர், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
5. தோசை கல்லில் மாவை ஊற்றி இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
6. தக்காளி சட்னி (அல்லது) தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

வெண்ணெய் பழம் சப்பாத்தி


தேவையான பொருட்கள்:
வெண்ணெய் பழம்
1
கோதுமை மாவு
1 கப்
உப்பு
1/2 டீ ஸ்பூன்
எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. வெண்ணெய் பழம் (பட்டர் ஃப்ரூட்) தோல் நீக்கிக் கொள்ளவும்.
2. கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். வெண்ணெய் பழத்தின் கொட்டையை நீக்கி நன்றாக மாவுடன் சேர்த்து பிசையவும்.
3. தேவை என்றால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
4. மாவை சிறிது நேரம் ஊற வைத்து சிறுசிறு உருண்டைக்களாக்கி மிருதுவான சப்பாத்தி செய்யவும்.
5. தோசை கல்லை சூடாக்கி சப்பாத்தியை இரு பக்கமும் சிறிது எண்ணெய் ஊற்றி சுடவும்.

செவ்வாய், 11 ஜூன், 2013

வெந்தய ரொட்டி


தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு
2 கப்
வெந்தயக் கீரை
2 கட்டு
பொடி உப்பு
1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள்
1/2 டீ ஸ்பூன்
எண்ணெய்
2 டேபிள் ஸ்பூன் (மாவுக்கு)
தனியாத்தூள்
1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்
1 டீ ஸ்பூன்
சீரகம் (அல்லது) ஓமம்
1/2 டீ ஸ்பூன்

செய்முறை:
1. எல்லா பொருட்களையும், ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
2. தேவையான தண்ணீர் தெளித்து, மிருதுவான மாவாகப் பிசையவும்.
3. சுமாரான கனமுள்ள சப்பாத்திகள் தயாரிக்கவும்.
4. சூடான தோசைக்கல்லின் மேலே சப்பாத்தியைப் போட்டு இருபுறமும் 1/2 டீ ஸ்பூன் எண்ணெய் விட்டுச் சுடவும்.

செவ்வாய், 4 ஜூன், 2013

உளுந்து தோசை


தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி
1 கப்
பச்சரிசி
1 கப்
தோல் உளுத்தம் பருப்பு
1/2 கப்
உப்பு
1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள்
1 டீ ஸ்பூன்
சீரக தூள்
1 டீ ஸ்பூன்
சுக்கு பொடி
1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய்
1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. அரிசி இரண்டையும் 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். மாவு அரைப்பதற்கு 1/2 மணி நேரம் முன்பு தோல் உளுத்தம் பருப்பை அரிசியுடன் ஊற வைக்கவும்.
2. கிரைண்டரில் அரிசி, உளுந்து தோலுடன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
3. மாவை 10 (அல்லது) 15 மணி நேரம் புளிக்க விடவும்.
4. தோசை ஊற்றுவதற்கு முன்பு மிளகு தூள், சீரகத் தூள், சுக்கு பொடி, நல்லெண்ணெய் சேர்க்கவும்.
5. மாவு தோசை ஊற்றுவது போல் தோசை ஊற்றவும்.
6. தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.