Translate

பொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 மார்ச், 2013

பருப்பு பொடி


தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை
1கப்
சிகப்பு மிளகாய்
10 (அல்லது) 12
கல் உப்பு
1 டீ ஸ்பூன்
பூண்டு
8 பல்
கொப்பரை தேங்காய்
1 டேபிள் ஸ்பூன்
நெய்
11/2 டீ ஸ்பூன்

செய்முறை:
1. வாணலியில் நெய் விட்டுச் சூடாக்கி, சிகப்பு மிளகாய், பொட்டுக்கடலை ஆகியவற்றை 1-2 நிமிடங்கள் வறுக்கவும்.
2. ஆற வைத்து உப்பு சேர்த்து மிக்ஸீயில் போட்டு பொடிக்கவும்.
3. சல்லடையில் சலித்து கப்பியை மீண்டும் மிக்ஸீயில் போட்டு இரண்டாவது முறையும் பொடிக்கவும். மறுபடியும் சலித்து கொள்ளவும்.
4. பின்னர், அந்த கப்பியில் பூண்டு, கொப்பரை தேங்காய் சேர்த்து மிக்ஸீயில் குறைந்த வேகத்தில் பொடிக்கவும்.
5. மிக்ஸீயிலிருந்து எடுத்து, சலித்த பவுடருடன் இந்தப் பொடியை சேர்த்து கலக்கவும்.
6. கைகளினால் நன்கு கலந்து, காற்றுப்புகா ஈரம் இல்லாத பாட்டில்களில் வைத்து பயன்படுத்தவும்.
7. சூடான சாதத்துடன் நெய் சேர்த்து இப்பொடியைக் கலந்து சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

வியாழன், 21 மார்ச், 2013

பருப்பு ரசப் பொடி


தேவையான பொருட்கள்:              
துவரம் பருப்பு
1/2 கப்
சிகப்பு மிளகாய்
1 கப்
தனியா
2கப்
சீரகம்
1/2 கப்
மிளகு
1 டேபிள் ஸ்பூன்
கடுகு
2 டீ ஸ்பூன்
வெந்தயம்
2 டீ ஸ்பூன்
கறிவேபில்லை
1/2 கப்

செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் தனியே வறுத்து ஒன்றாக சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.  (அல்லது)
சூரிய ஒளியில் காய வைத்து, பிறகு ஒன்றாக பொடிக்கவும். காற்றுபுகா டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.  

சாம்பார் பொடி


தேவையான பொருட்கள்:              
குண்டு சிகப்பு மிளகாய்
3கப்
தனியா
2 கப்
கடலை பருப்பு
1/4 கப்
துவரம் பருப்பு
1/4 கப்
மிளகு
11/2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மஞ்சள் கொம்பு
1 துண்டு
செய்முறை:
சூரிய ஒளியில் அனைத்து பொருட்களையும் காய வைத்து பின் ஒன்றாகச் சேர்த்து பொடியாக்கி காற்றுப்புகா பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.  (அல்லது)
ஒவ்வொன்றையும் தனியே வறுத்து சேர்த்து பொடிக்கலாம்.
குறிப்பு:
1 (அல்லது) 2 டீ ஸ்பூன் வெந்தயம் சேர்க்கலாம். லேசாக வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து பொடிக்கவும்.