தேவையான பொருட்கள்:
கெட்டி அவுல்
|
2 கப்
|
புளி
|
நெல்லிக்காயளவு
|
மஞ்சள் தூள்
|
1/4 டீ ஸ்பூன்
|
பொடி உப்பு
|
11/2
டீ ஸ்பூன்
|
மிளகாய் தூள்
|
1 டீ ஸ்பூன்
|
வெல்லம்
|
1/2 டீ ஸ்பூன்
|
பச்சை மிளகாய்
|
3
|
பீன்ஸ்
|
10 (அல்லது) 15
|
கேரட்
|
1 (துறுவியது)
|
தாளிக்க:
கடுகு
|
1/4 டீ ஸ்பூன்
|
உளுத்தம் பருப்பு
|
1/2 டீ ஸ்பூன்
|
கடலை பருப்பு
|
1/2 டீ ஸ்பூன்
|
எண்ணெய்
|
2 டேபிள்
ஸ்பூன்
|
கறிவேப்பில்லை
|
சிறிதளவு
|
கொத்தமல்லி தழை
|
சிறிதளவு
|
செய்முறை:
1. அவுலை நன்றாக கழுவிக் கொள்ளவும். கழுவிய அவுலில் புளி தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், வெல்லம் சேர்த்து ஊற வைக்கவும்.
2. கெட்டி அவுல் என்றால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும். லேசான அவுல் என்றால் சிறிது தண்ணீரே போதுமானது. (ஊரிய அவுலை மாவு போல் நன்றாக உதிர்த்க் கொள்ளவும்.)
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
4. பிறகு பொடியாக நறுக்கிய பீன்ஸ், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. துறுவிய கேர்ட் கறிவேப்பில்லை சேர்க்கவும்.
6. ஊரிய அவுலை நன்றாக உதிர்த்து வாணலியில் சேர்க்கவும்.
7. பச்சை வாசனை போகும் வரை விடாமல் கிளறி விடவும். கடைசியில் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக