Translate

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

புதினா ரைஸ்



தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம்
1 கப்
வெங்காயம்
2 பெரியது
புதினா
2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி
2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பில்லை
2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா
1/2 டீ ஸ்பூன்
வேக வைத்த சோளம்
2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்
4
உப்பு
1/2 டீ ஸ்பூன்
சோம்பு
1/4 டீ ஸ்பூன்
எண்ணெய்
2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:
1. புதினா, கொத்தமல்லி, கறிவேபில்லை,பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸீயில் அரைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. வேகவைத்த சாதம் சேர்த்து நன்றாக கிளரவும்.
6. வேக வைத்த சோளம் சேர்த்து இறக்கவும் (அல்லது) வறுத்த முந்திரியை சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக