Translate

பச்சடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பச்சடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 மே, 2013

வெள்ளரிக்காய் பச்சடி



தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய்
1 (பெரியது)
பொட்டுக்கடலை
2  டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய்
4
உப்பு
1/2 டேபிள் ஸ்பூன்
தயிர்
2  டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. பெரிய வெள்ளரிக்காய்  என்றால் தோல் நீக்கிக் கொள்ளவும். சிறியது என்றால் 4 (அல்லது) 5 தோலுடன் துறுவிக் கொள்ளவும்.
2. மிக்ஸீயில் துறுவிய வெள்ளரிக்காய், பொட்டுக்கடலை, உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த விழுதுடன் தயிர் சேர்த்து கடுகு,கறிவேப்பில்லை தாளிக்கவும்.
4. சாதத்துடுன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

உளுந்து பச்சடி



தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு
1/4 கப்
சிவப்பு மிளகாய்
8
புளி
கோலி ஊருண்டை அளவு
உப்பு
தேவையான அளவு
வெல்லம்
சுவைக்கேற்ப
பெரிய வெங்காயம்
1

பொரிப்பதற்கு:
எண்ணெய்
11/2 டேபிள் ஸ்பூன்
கடுகு
1/4 டீ ஸ்பூன்

செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, சிவப்பு மிளகாய், உளுந்து சேர்த்து, பொன் நிறம் வரும் வரையில் வறுக்கவும்.
2. ஆறியபின் மற்ற பொருட்களை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். (அரைக்கும் போது சிறிதளவே நீர் சேர்க்கவும்.)
3. எஞ்சிய எண்ணெய் சூடாக்கவும். கடுகு சேர்த்து பொரித்து, பச்சடியுடன் கலக்கவும்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

தக்காளிக்காய் பச்சடி


தேவையான பொருட்கள்:
தக்காளிக்காய்
1 கப்
பச்சை மிளகாய்
5
பூண்டு
4 பல்
சீரகம்
1/4 டீ ஸ்பூன்
உப்பு
தேவையான அளவு
எண்ணெய்
கடுகு பொரிக்க

செய்முறை:
1. தக்காளிக்காயை துண்டுக்களாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, சீரகத்தைச் சேர்த்து வறுத்துக் கொண்டு, பூண்டு, மிளகாய் சேர்த்து பின் தக்காளியையும் சேர்க்கவும். தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும்.
3. ஆறிய பின் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
4. எண்ணெயில் சிறிது கடுகு சேர்த்து பொரித்து பச்சடியுடன் கலந்து கொள்ளவும்.

புதன், 6 மார்ச், 2013

நெல்லிக்காய் பச்சடி



தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய்
2 (அல்லது) 3
துறுவிய தேங்காய்
2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்
2
உப்பு
தேவையான அளவு
கட்டித் தயிர்
3/4 கப்
எண்ணெய்
1 டீ ஸ்பூன்
கடுகு
சிறிதளவு



செய்முறை:
1. நெல்லிக்காயை வெட்டி விதைகளை எடுத்து விடவும்.
2. எண்ணெயில் கீறிய பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும், அதிக நேரம் வதக்க வேண்டும்.
3. மிளகாய், நெல்லிக்காய், உப்பு, தேங்காயைச் சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து பச்சடியில் சேர்க்கவும்.
5. பரிமாறுவதற்கு முன் கட்டித் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

திங்கள், 26 நவம்பர், 2012

இஞ்சி பச்சடி



தேவையான பொருட்கள்:
கட்டித் தயிர்
1 கப்
உப்பு
தேவையான அளவு
கொத்தமல்லி
சிறிதளவு
கறிவேப்பிலை
சிறிதளவு

தாளிக்க:
எண்ணைய்
1 ½  டீ ஸ்பூன்
கடுகு
¼ டீ ஸ்பூன்

அரைத்துக் கொள்ளவும்:
இஞ்சி
1 அங்குலத் துண்டு
துறுவிய தேங்காய்
¼ கப்
பூண்டு
2 பல்
பச்சை மிளகாய்
2
சர்க்கரை
1 டீ ஸ்பூன்

செய்முறை:

1) அரைக்க வேண்டிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துச் சிறிதளவே தண்ணீர் விட்டு கெட்டியான விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
2) கடுகு தாளித்துக் கொள்ளவும்,கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
3) பரிமாறுவதற்கு முன்னர் கட்டித் தயிர் சேர்த்துக் கலக்கவும்.