Translate

புதன், 21 நவம்பர், 2012

தக்காளி ரசம்


தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த தக்காளி
1/2 கிலோ
புளி
சிறிதளவு
நெய்
வதக்க
கறிவேப்பிலை,கொத்தமல்லித் தழை  
சிறிதளவு
உப்பு & வெல்லம் 
தேவையான அளவு
பெருங்காயத் தூள்
சிறிதளவு

கரகரப்பாக இடித்துக் கொள்ளவும்:

பச்சை மிளகாய்               
3 () 4
சிறிய வெங்காயம் (உரித்தது)    
சில
பூண்டுப் பல்                              
3
தனியா
1/2 டீ ஸ்பூன்
சீரகம் 
1/2 டீ ஸ்பூன்
பட்டை
 1/2  அங்குலத் துண்டு










செய்முறை:

1) தக்காளியைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2) முழ்கும் அளவு தண்ணீர் விட்டு, புளி சேர்த்து தக்காளி மென்மையாக வேகும் வரை கொதிக்க விடவும். (மேல் தோல் எளிதாக எடுக்கக் கூடிய வரையில்)
3) ஆற விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். விதைகளையும் தோலையும்வடிததெடுத்து விடவும்.
4) தேவையானால் நீர் சேர்த்து உப்பு, வெல்லம்  சேர்க்கவும்.
5) குறிப்பிடப்பட்டு உள்ள பொருட்களை நெய்யில் வறுத்து இடித்து  தக்காளி சாறில் சேர்த்துக் கொள்ளவும்.
6) 1  (அ) 2 நிமிடம் கொதிக்க விடவும்.
7) நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லித் தழை மேலே போடவும்.
8) சிறிது நெய்யைச் சூடக்கி பெருங்காயத் தூள் சேர்த்து ரசத்துடன் கலந்து கொள்ளவும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக