Translate

ரசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 மே, 2013

மிளகு ரசம்



தேவையான பொருட்கள்:
புளி
சிறிய எலுமிச்சை அளவு
தண்ணீர்
3 1/2 கப்
உப்பு, வெல்லம்
தேவையான அளவு
பெருங்காயம்
சிறிதளவு
எண்ணெய்
தாளிக்க
கடுகு
1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை
சிறிதளவு
கொத்தமல்லி
சிறிதளவு

கரகரப்பாக பொடிக்கவும்:
தனியா
1 1/2 டீ ஸ்பூன்
சீரகம்
1/2 டீ ஸ்பூன்
சிகப்பு மிளகாய்
2 (அல்லது) 3
பூண்டு
2 பல்
கறிவேப்பில்லை
சிறிதளவு
மிளகு
1/4  டீ ஸ்பூன்

செய்முறை:
1. புளியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து புளிக் கரைசல் தயாரித்துக் கொள்ளவும்.
2. தேவையான தண்ணீர் சேர்த்து நீர்த்துக் கொள்ளவும். பருப்பு வேக வைத்த தண்ணீர் இருந்தால் சேர்த்துக் கொள்ளவும்.
3. உப்பு, வெல்லம் பெருங்காயம் சேர்த்து சூடாக்கவும்.
4. கொதி வந்தவுடன் பொடித்த மசாலா, கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
5. சிறிது எண்ணெய்ச் சூடாக்கி கடுகு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
6. ரசம் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து மூடி விடவும்.

செவ்வாய், 26 மார்ச், 2013

முருங்கக்காய் ரசம்


முருங்கக்காய் ரசம்

தேவையான பொருட்கள்:
முருங்கக்காய்
1 (அல்லது) 2
பாசிப்பருப்பு
1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர்
2 கப்
உப்பு
1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்
1/2 டீ ஸ்பூன்
மிளகு தூள்
1/4 டீ ஸ்பூன்
கொத்தமல்லி தூள்
1/4 டீ ஸ்பூன்
சீரகத் தூள்
1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள்
1/4 டீ ஸ்பூன்
எலுமிச்சை
1
கொத்தமல்லி
தேவையான அளவு
கறிவேப்பில்லை
தேவையான அளவு
கடுகு
தாளிக்க
எண்ணெய்
1 டீ ஸ்பூன்
பெருங்காய்த் தூள்
தாளிக்க
  
செய்முறை:
1. முருங்கக்காய்யை சிறு துண்டுக்களாக நறுக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்புடன், தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து வேக வைத்த முருங்கக்காய்யுடன் கொதிக்க விடவும்.
3. கொதிக்கும் போது கொத்தமல்லி தழை, கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.
4. எண்ணெயில் கடுகு, பெருங்காய்த் தூள் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
5. அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

புதன், 6 மார்ச், 2013

பச்சை ரசம்


தேவையான பொருட்கள்:

நீர்த்த புளிக் கரைசல்
2 கப்
பச்சை மிளகாய்
4 (அல்லது) 5
பொடியாக நறுக்கிய வெங்காயம்
1/2 கப்
கொத்தமல்லி தழை
தேவையான அளவு
உப்பு, வெல்லம்
தேவையான அளவு
எண்ணெய், கடுகு
வறுக்க



செய்முறை:
1. புளிக் கரைசலுடன் உப்பு, வெல்லம், வெங்காயம், கொத்தமல்லி தழை ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெயைச் சூடாக்கி கடுகு சேர்த்து பொரித்து, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ரசத்தில் சேர்க்கவும்.

குறிப்பு:
இது வேக வைக்காத ரசம், சூடாக்கவோ (அல்லது) கொதிக்கவோ விட வேண்டாம்

புதன், 21 நவம்பர், 2012

தக்காளி ரசம்


தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த தக்காளி
1/2 கிலோ
புளி
சிறிதளவு
நெய்
வதக்க
கறிவேப்பிலை,கொத்தமல்லித் தழை  
சிறிதளவு
உப்பு & வெல்லம் 
தேவையான அளவு
பெருங்காயத் தூள்
சிறிதளவு

கரகரப்பாக இடித்துக் கொள்ளவும்:

பச்சை மிளகாய்               
3 (அ) 4
சிறிய வெங்காயம் (உரித்தது)    
சில
பூண்டுப் பல்                              
3
தனியா
1/2 டீ ஸ்பூன்
சீரகம் 
1/2 டீ ஸ்பூன்
பட்டை
 1/2  அங்குலத் துண்டு










செய்முறை:

1) தக்காளியைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2) முழ்கும் அளவு தண்ணீர் விட்டு, புளி சேர்த்து தக்காளி மென்மையாக வேகும் வரை கொதிக்க விடவும். (மேல் தோல் எளிதாக எடுக்கக் கூடிய வரையில்)
3) ஆற விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். விதைகளையும் தோலையும்வடிததெடுத்து விடவும்.
4) தேவையானால் நீர் சேர்த்து உப்பு, வெல்லம்  சேர்க்கவும்.
5) குறிப்பிடப்பட்டு உள்ள பொருட்களை நெய்யில் வறுத்து இடித்து  தக்காளி சாறில் சேர்த்துக் கொள்ளவும்.
6) 1  (அ) 2 நிமிடம் கொதிக்க விடவும்.
7) நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லித் தழை மேலே போடவும்.
8) சிறிது நெய்யைச் சூடக்கி பெருங்காயத் தூள் சேர்த்து ரசத்துடன் கலந்து கொள்ளவும்.