Translate

ரைஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரைஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கேரட் ரைஸ்


தேவையான பொருட்கள்:
கேரட்
1 (துருவியது)
வேக வைத்த சாதம்
1 கப்
முந்திரி
6
சோம்பு
1/4 டீ ஸ்பூன்
எண்ணெய்
1 1/2 டேபிள் ஸ்பூன்

அரைத்து கொள்ளவும்:
தேங்காய்
1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்
1/2 (பெரியது)
சிவப்பு மிளகாய்
3
உப்பு
1/2 டீ ஸ்பூன்

செய்முறை:
1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் உற்றி சோம்பு  போட்டு தாளிக்கவும்.  பிறகு துருவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
2. மிக்ஸீயில் தேங்காய், வெங்காயம், சிவப்பு மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
3. கேரட் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. வேக வைத்த சாதம் சேர்த்து நன்றாக கிளரவும். வறுத்த முந்திரி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

வெள்ளி, 15 நவம்பர், 2013

முட்டைகோஸ் ரைஸ்


தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ்
1/2கப்
வேக வைத்த சாதம்
1 கப்
தேங்காய்
1 டேபிள் ஸ்பூன்
பொட்டுகடலை
1/2 டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய்
4
உப்பு
1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள்
1/4 டீ ஸ்பூன்
எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன்
கடுகு
தாளிக்க
உளுத்தம் பருப்பு
1/4 டீ ஸ்பூன்
கடலை பருப்பு
1/4 டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு
1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. முட்டைகோஸ் பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. தேங்காய், பொட்டுகடலை, சிகப்பு மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் மிக்ஸீயில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
4. பிறகு வேக வைத்த முட்டைகோஸ் மிக்ஸீயில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
5. வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளரவும். எலுமிச்சை சாறு, கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

புதன், 22 மே, 2013

கோவக்காய் ரைஸ்


தேவையான பொருட்கள்:
கோவக்காய்
10 (அல்லது) 15
சோம்பு
1/4 டீ ஸ்பூன்
எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த சாதம் 
1 கப்
கறிவேப்பில்லை
சிறிதளவு
கொத்தமல்லி
சிறிதளவு
எலுமிச்சை சாறு
1 டேபிள் ஸ்பூன்

அரைத்துக் கொள்ளவும்:
தேங்காய்
1 டேபிள் ஸ்பூன்
சீரகம்
1/4 டீ ஸ்பூன்
பூண்டு
4 பல்
உப்பு
1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்
5
மஞ்சள் தூள்
1/4 டீ ஸ்பூன்

செய்முறை:
1. கோவக்காய் நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளிக்கவும். நறுக்கிய கோவக்காயை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
3. நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்க்கவும்.
4. சிறிது தண்ணீர் இறுக்கும் பொழுது வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளரவும்.
5. கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.


செவ்வாய், 23 ஏப்ரல், 2013

புதினா ரைஸ்



தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம்
1 கப்
வெங்காயம்
2 பெரியது
புதினா
2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி
2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பில்லை
2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா
1/2 டீ ஸ்பூன்
வேக வைத்த சோளம்
2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்
4
உப்பு
1/2 டீ ஸ்பூன்
சோம்பு
1/4 டீ ஸ்பூன்
எண்ணெய்
2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:
1. புதினா, கொத்தமல்லி, கறிவேபில்லை,பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸீயில் அரைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. வேகவைத்த சாதம் சேர்த்து நன்றாக கிளரவும்.
6. வேக வைத்த சோளம் சேர்த்து இறக்கவும் (அல்லது) வறுத்த முந்திரியை சேர்க்கலாம்.

புதன், 13 மார்ச், 2013

கீரை ஃப்ரைட் ரைஸ்




தேவையான பொருட்கள்:
வடித்த சாதம்
1 கப்
கீரை
1 கட்டு
வெங்காயம்
2 பெரியது
பூண்டு
10 பல்
உப்பு
1/2 டீ ஸ்பூன்
மிளகு தூள்
 3/4 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள்
1/4 டீ ஸ்பூன்
வருத்த நிலக்கடலை
சிறிதளவு
சோம்பு
சிறிதளவு
எண்ணெய்
சிறிதளவு

செய்முறை:
1. பொன்னககண்ணி கீரை அல்லது பசலை கீரை ஒரு கட்டு நன்றாக தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்த பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
4. கீரை சேர்த்து வதங்கியதும், உப்பு, மிளகு தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.
5. வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளரவும்.
6. பொடித்த நிலக்கடலை சேர்த்து இறக்கவும்.

செவ்வாய், 5 மார்ச், 2013

காளிப்ளவர், பட்டாணி ரைஸ்


தேவையான பொருட்கள்:

வடித்த சாதம்
1 கப்
காளிப்ளவர்
1/2 கப்
பட்டாணி
1/4 கப்
வெங்காயம்
1 (பெரியது)
பூண்டு
10 பல்
தக்காளி
2
மஞ்சள் தூள்
1/4 டீ ஸ்பூன்
தூள் உப்பு
1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்
1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசால தூள்
1/4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை
தேவையான அளவு
கொத்தமல்லி தழை
தேவையான அளவு
எண்ணெய்
4 டேபிள் ஸ்பூன்
சோம்பு
தாளிக்க


செய்முறை:
1. காளிப்ளவரை முதலில் சூடான தண்ணீரில் போட்டு எடுத்து கொள்ளவும். பூச்சி, புழு இருந்தால் வந்துவிடும்.
2. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சிறிது சோம்பு சேர்த்து தாளித்து பிறகு பட்டாணி, காளிப்ளவரை வதக்கவும்.

3. வெங்காயம், பூண்டு ,கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

4. தக்காளி நன்றாக வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசால தூள், சேர்த்த பிறகு வடித்த சாதத்தை போட்டு கிளரவும்.

5. கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.