Translate

புதன், 5 ஜூன், 2013

குடை மிளகாய் ரைஸ்


தேவையான  பொருட்கள்:
வேக வைத்த சாதம்
1 கப்
குடை மிளகாய்
1 ( அல்லது) 2
எண்ணெய்
11/2 டேபிள் ஸ்பூன்
கடுகு 
1/4 டீ ஸ்பூன்

வறுத்து பொடி செய்துக் கொள்ளவும்:
உளுத்தம் பருப்பு
1/4 டீ ஸ்பூன்
கடலை பருப்பு
1/4 டீ ஸ்பூன்
வரகொத்தமல்லி
1/2 டீ ஸ்பூன்
பட்டை
சிறு துண்டு
சிகப்பு மிளகாய்
4 (அல்லது) 5
தேங்காய்
1 டேபிள் ஸ்பூன்
உப்பு 
1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. ஒரு வாணலியில் ஒரு துளி எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வரகொத்தமல்லி, பட்டை, சிகப்பு மிளகாய் சேர்த்து பொன்னிறமாகா வறுக்கவும். கடைசியில்   தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.
2. மிக்ஸீயில்சுடாறிய பிறகு உப்பு சேர்த்து நன்றாக பொடி செய்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.
4. பிறகு பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. குடை மிளகாய் நன்றாக வதங்கியதும் வறுத்து பொடி செய்ததை சேர்க்கவும். இப்பொழுது வேக வைத்த சாதம் சேர்த்து நன்றாக கிளரவும்.
6. கொத்தமல்லி, கறிவேப்பில்லை தழை சேர்த்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக