Translate

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கொண்டகடலை (சென்னா) மசாலா


தேவையான பொருட்கள்:
கொண்டகடலை
100 கிராம்
வெங்காயம் (பெரியது)
2 (அல்லது) 3
தக்காளி
2
உப்பு
1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்
1/2 டீ ஸ்பூன்
மல்லி தூள்
1/4 டீ ஸ்பூன்
சீரக தூள்
1/4 டீ ஸ்பூன்
கரம் மசாலா
1/4 டீ ஸ்பூன்
வெல்லம்
சிறிதளவு
சோம்பு
1/2 டீ ஸ்பூன்
தேங்காய்
1 டேபிள் ஸ்பூன்
முந்திரி
5
பாதாம்
5
கொத்தமல்லி, கறிவேப்பிலை
சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது
1/2 டீ ஸ்பூன்
எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. வெள்ளை கொண்டகடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. ஊறிய கொண்டகடலையை குக்கரில் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயம், தக்காளி இரண்டையும் தனிதனியாக அரைத்து கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
5. அரைத்த வெங்காய விழுதை சேர்க்கவும், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அரைத்த தக்காளி விழுதை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும்.
6. இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், வெல்லம் சேர்க்கவும்.
7. தேங்காய், முந்திரி, பாதாம் சேர்த்து அரைத்த விழுது, வேக வைத்த சென்னா (கொண்டகடலை) சேர்க்கவும்.
8. சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
9. கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக