Translate

புதன், 27 பிப்ரவரி, 2013

இட்லி


தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி
4 கப்
உளுத்தம் பருப்பு
(தோல் நீக்கிய முழு பருப்பு)

1 கப்
வெந்தயம்
1 டீ ஸ்பூன்
கல் உப்பு
3 டீ ஸ்பூன்


1 கப் =  200 கிராம்
செய்முறை:
1. உளுத்தம் பருப்பைத் கழுவி முழுகும் அளவு தண்ணீர் விட்டு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியையும் வெந்தயத்தை கழுவி ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.










2. பருப்பை மிருதுவாக அரைத்துத் தனியாக வைக்கவும்.
3. அரிசியை நுண்ணிய ரவையைப் போல் அரைத்துக் கொள்ளவும்.
4. கிரைண்டரிலிருந்து அரைத்த அரிசியை எடுக்கும் முன் உப்பும் அரைத்த பருப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து கிரைண்டரிலிருந்து எடுக்கவும்.
5. மாவு பொங்குவதற்க்குத் தகுந்த மாதிரி ஒரு பெரிய பாத்திரத்தில் வைக்கவும்.



6. இட்லி வைப்பதற்கு முந்தின நாளே, சுமார் 15 (அல்லது) 20 மணி நேரம் முன்னதாகவே, மாவு பொங்குவதற்கு நேரம் கொடுத்து அரைத்து வைக்கவும்.
7. மறுநாள் எண்ணேய் தடவிய இட்லி தட்டுகளில் ஊற்றி 7 (அல்லது) 8 நிமிடம் குக்கரில் ஆவியில் வேகவிடவும்.

குறிப்பு:
உளுத்தம் பருப்பு உபரி அதிகமாக இருந்தால் 100 கிராம் போதுமானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக