Translate

திங்கள், 4 மார்ச், 2013

அரிசி பருப்பு அடை


தேவையான பொருட்கள்:

பச்சரிசி
1 கப்
துவரம் பருப்பு
1/2 கப்
கடலைப் பருப்பு
1/4 கப்
உளுத்தம் பருப்பு
1/4 கப்
தேங்காய் துருவல்
1/2 கப்
சீரகம்
1 டீ ஸ்பூன்
மிளகு
1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம்
தேவையான அளவு
காய்ந்த மிளகாய்
8
உப்பு
1 டீ ஸ்பூன் (குவித்து)



செய்முறை:
1. அரிசியையும், பருப்புக்களையும் கழுவி 11/2 மணி நேரம் முன்னதாக ஊறவைக்கவும்.

2. தேங்காய், மிளகு, சீரகம், மிளகாய், அரிசி, பருப்புக்கள் அனைத்தையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.


3. தோசைக்கல்லை அடுப்பில் காய வைத்து சிறிது மாவை ஊற்றி கனமான அடையாக வட்டமாகப் பரப்பவும்.

4. சுற்றிலும் ஒரு டீ ஸ்பூன் எண்ணைய்விட்டு மிதமான தீயில் இருப்புறமும் சூடவும்.


5. மாவை அரைத்து 10 (அல்லது) 15 மணி நேரம் பிறகு தோசை சுடும் பொழுது வெங்காயம், முருங்கக்கீரை தழை கலந்து சுட்டால் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக