Translate

செவ்வாய், 5 மார்ச், 2013

காளிப்ளவர், பட்டாணி ரைஸ்


தேவையான பொருட்கள்:

வடித்த சாதம்
1 கப்
காளிப்ளவர்
1/2 கப்
பட்டாணி
1/4 கப்
வெங்காயம்
1 (பெரியது)
பூண்டு
10 பல்
தக்காளி
2
மஞ்சள் தூள்
1/4 டீ ஸ்பூன்
தூள் உப்பு
1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்
1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசால தூள்
1/4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை
தேவையான அளவு
கொத்தமல்லி தழை
தேவையான அளவு
எண்ணெய்
4 டேபிள் ஸ்பூன்
சோம்பு
தாளிக்க


செய்முறை:
1. காளிப்ளவரை முதலில் சூடான தண்ணீரில் போட்டு எடுத்து கொள்ளவும். பூச்சி, புழு இருந்தால் வந்துவிடும்.
2. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சிறிது சோம்பு சேர்த்து தாளித்து பிறகு பட்டாணி, காளிப்ளவரை வதக்கவும்.

3. வெங்காயம், பூண்டு ,கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

4. தக்காளி நன்றாக வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசால தூள், சேர்த்த பிறகு வடித்த சாதத்தை போட்டு கிளரவும்.

5. கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக