Translate

புதன், 17 ஏப்ரல், 2013

இட்லி உப்புமா


தேவையான பொருட்கள்:
இட்லி (வேக வைத்தது)
20 இட்லி
வெங்காயம்
2 பெரியது
பச்சை மிளகாய்
5
மஞ்சள் தூள்
1/4 டீ ஸ்பூன்
கேரட்
1 (துறுவியது)
உப்பு
1/2 டீ ஸ்பூன்
கறிவேபில்லை
சிறிதளவு
கொத்தமல்லி
சிறிதளவு

தாளிக்க:
கடுகு
1/4 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு
1/2 டீ ஸ்பூன்
கடலை பருப்பு
1/2 டீ ஸ்பூன்
எண்ணெய்
2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. வேக வைத்த இட்லியை சூடு ஆறியதும் சிறிது தண்ணீர் தலித்து பொடி செய்துக் கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
3. பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேபில்லை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
4. துறுவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும், பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
5. பொடி செய்த இட்லியை சேர்த்து நன்றாக கிளரவும். கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக