Translate

வெள்ளி, 17 மே, 2013

மிளகு ரசம்



தேவையான பொருட்கள்:
புளி
சிறிய எலுமிச்சை அளவு
தண்ணீர்
3 1/2 கப்
உப்பு, வெல்லம்
தேவையான அளவு
பெருங்காயம்
சிறிதளவு
எண்ணெய்
தாளிக்க
கடுகு
1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை
சிறிதளவு
கொத்தமல்லி
சிறிதளவு

கரகரப்பாக பொடிக்கவும்:
தனியா
1 1/2 டீ ஸ்பூன்
சீரகம்
1/2 டீ ஸ்பூன்
சிகப்பு மிளகாய்
2 (அல்லது) 3
பூண்டு
2 பல்
கறிவேப்பில்லை
சிறிதளவு
மிளகு
1/4  டீ ஸ்பூன்

செய்முறை:
1. புளியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து புளிக் கரைசல் தயாரித்துக் கொள்ளவும்.
2. தேவையான தண்ணீர் சேர்த்து நீர்த்துக் கொள்ளவும். பருப்பு வேக வைத்த தண்ணீர் இருந்தால் சேர்த்துக் கொள்ளவும்.
3. உப்பு, வெல்லம் பெருங்காயம் சேர்த்து சூடாக்கவும்.
4. கொதி வந்தவுடன் பொடித்த மசாலா, கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
5. சிறிது எண்ணெய்ச் சூடாக்கி கடுகு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
6. ரசம் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து மூடி விடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக