தேவையான பொருட்கள்:
கம்பு
|
1 கப்
|
புழுங்கலரிசி
|
1 கப்
|
உளுத்தம் பருப்பு
|
1/2 கப்
|
கல் உப்பு
|
1/2 டீ ஸ்பூன்
|
செய்முறை:
1. அரிசியையும், கம்பையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைத்துக் கொள்ளவும்.
2. பருப்பை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரிசி, கம்பு கிரைண்டரில் நன்றாக அரைக்கவும், இப்பொழுது உளுந்தையும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
4. மாவு 15 (அல்லது) 20 மணி நேரம் வரை புளிக்க விடவும்.
5. எப்பொழுதும் தோசை ஊற்றுவது போல் ஊற்றி இரண்டு பக்கமும் சுடவும்.
6. தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக