Translate

புதன், 6 நவம்பர், 2013

மொறுமொறு பிரோக்கொளி பஜ்ஜி



தேவையான பொருட்கள்:
பிரோக்கொளி
1 கப்
கடலை மாவு
2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு
2 டீ ஸ்பூன்
உப்பு
1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்
1/2 டீ ஸ்பூன்
பெருங்காய தூள்
1/2 டீ ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது
1/4 டீ ஸ்பூன்
சோடா உப்பு
1 சிட்டிகை
எண்ணெய்
பொறிப்பதற்கு

செய்முறை:
1. பிரோக்கொளியை சிறு சிறு துண்டுகளாக செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
2. 10 நிமிடத்திற்கு பிறகு நன்றாக கழுவி எடுக்கவும்.
3. ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காய தூள், இஞ்சி பூண்டு விழுது, சோடா உப்பு அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் பிரோக்கொளி ஒரு ஒரு துண்டாக மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக