Translate

புதன், 13 நவம்பர், 2013

வடகறி


தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு
100 கிராம்
உளுத்தம் பருப்பு
25 கிராம்
வெங்காயம்
2
தக்காளி
2
இஞ்சிபூண்டு விழுது
1/4 டீ ஸ்பூன்
சோம்பு
1/4 டீ ஸ்பூன்
எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன்

அரைத்து கொள்ளவும்:
தேங்காய்
11/2 டேபிள் ஸ்பூன்
கசாகசா
1 டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய்
5
உப்பு
1/2 டீ ஸ்பூன்
கரம்மசாலா தூள்
1/4 டீ ஸ்பூன்
            
செய்முறை:
1. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறிய பருப்பை மிக்ஸீயில் தண்ணீர் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை சிறு சிறு வடைகளாக எண்ணெயில் பொறிக்கலாம் அல்லது ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. தேங்காய், கசாகசா, சிகப்பு மிளகாய், உப்பு, கரம்மசாலா தூள் இவை அனைத்தும் மிக்ஸீயில் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
4. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
5.  தக்காளி வதங்கியதும் அரைத்த  விழுது சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.  ஆவியில் வேக வைத்திருந்தால் வடையை சிறு துண்டுகளாக செய்து கறியுடன் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
6. தோசைக்கு நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக