தேவையான பொருட்கள்:
பச்சரிசி
|
1 கப்
|
பாசி பருப்பு
|
1/2 கப்
|
மிளகு
|
1/4 டீ ஸ்பூன்
|
சீரகம்
|
1/4 டீ ஸ்பூன்
|
சிகப்பு மிளகாய்
|
3
|
கருவேப்பில்லை
|
சிறிதளவு
|
இஞ்சி
|
சிறிதளவு
|
பெருங்காயம்
|
தேவைக்கேற்ப
|
முந்திரி
|
10 அல்லது 15
|
எண்ணெய் அல்லது நெய்
|
தேவைகேற்ப
|
உப்பு
|
தேவையான அளவு
|
தண்ணீர்
|
4 அல்லது 5 கப்
|
செய்முறை:
1. ஒரு வாணலியில் அரிசி,பருப்பு இரண்டையும்
சேர்த்து வருக்கவும். அரிசி லேசாக பொரிந்ததும் இறக்கவும்.
2. ப்ரெஶர் குக்கரில்
பழைய அரிசியாக இருந்தால் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இல்லையென்றால் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி
அரிசி, பருப்பு, உப்பு 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
3. வாணலியில் 2 ஸ்பூன்
நெய் ஊற்றி மிளகு, சீரகம், சிகப்பு
மிளகாய், முந்திரி, துருவிய இஞ்சி, பெருங்காயம், சேர்த்து தாளிக்கவும்.
4 வேக வைத்த அரிசி,பருப்பு இரண்டையும்
நன்றாக குழைத்து கொள்ளவும். தாளித்தவைகளுடன் சேர்த்து சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக