தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை
|
1கப்
|
சிகப்பு மிளகாய்
|
10 (அல்லது) 12
|
கல் உப்பு
|
1 டீ ஸ்பூன்
|
பூண்டு
|
8 பல்
|
கொப்பரை தேங்காய்
|
1 டேபிள் ஸ்பூன்
|
நெய்
|
11/2 டீ ஸ்பூன்
|
செய்முறை:
1. வாணலியில்
நெய் விட்டுச் சூடாக்கி, சிகப்பு மிளகாய், பொட்டுக்கடலை
ஆகியவற்றை 1-2 நிமிடங்கள் வறுக்கவும்.
2. ஆற வைத்து உப்பு சேர்த்து
மிக்ஸீயில் போட்டு பொடிக்கவும்.
3. சல்லடையில்
சலித்து கப்பியை மீண்டும் மிக்ஸீயில்
போட்டு இரண்டாவது முறையும் பொடிக்கவும். மறுபடியும் சலித்து கொள்ளவும்.
4. பின்னர்,
அந்த கப்பியில் பூண்டு, கொப்பரை தேங்காய்
சேர்த்து மிக்ஸீயில் குறைந்த வேகத்தில் பொடிக்கவும்.
5. மிக்ஸீயிலிருந்து
எடுத்து, சலித்த பவுடருடன் இந்தப்
பொடியை சேர்த்து கலக்கவும்.
6. கைகளினால்
நன்கு கலந்து, காற்றுப்புகா ஈரம்
இல்லாத பாட்டில்களில் வைத்து பயன்படுத்தவும்.
7. சூடான
சாதத்துடன் நெய் சேர்த்து இப்பொடியைக்
கலந்து சாப்பிட மிக ருசியாக
இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக