Translate

சனி, 10 அக்டோபர், 2015

மைக்ரொவேவ் கேசரி

தேவையான பொருட்கள்:

ரவா
1 கப்
 தண்ணீர்                                 
2 கப்
பால்
1/2 கப்
சர்க்கரை
3/4 கப்
நெய்
2 டேபிள் ஸ்பூன்
கேசரி கலர்
1 சிட்டிகை
முந்திரி
10
கிஸ்மிஸ்
சிறிதளவு

செய்முறை:

1. ஒரு மைக்ரொவேவ் பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு முந்திரி, கிஸ்மிஸ் வருத்து தனியாக வைத்துகொள்ளவும்.
2. ரவா, தண்ணீர்,பால், சர்க்கரை, நெய் அணைத்தையும் ஒன்றாக கலந்து 3 நிமிடம் வைக்கவும்.
3. பிறகு ஒரு தடவை நன்றாக கலந்து விட்டு 2 நிமிடம் வைக்கவும்.
4. சிறிது கேசரி கலர் சேர்த்து 30 நொடிகள் வைத்து எடுக்கவும்.
5. பிறகு வருத்த முந்திரி, கிஸ்மிஸ் கலந்து பரிமாறவும்.

வியாழன், 8 அக்டோபர், 2015

பொங்கல்


தேவையான பொருட்கள்:
பச்சரிசி  
  1 கப்

பாசி பருப்பு       
1/2 கப்

மிளகு
1/4 டீ ஸ்பூன்
சீரகம்
1/4 டீ ஸ்பூன்
சிகப்பு மிளகாய்   
3
கருவேப்பில்லை
சிறிதளவு
இஞ்சி
சிறிதளவு
பெருங்காயம்
  தேவைக்கேற்ப

முந்திரி   
10 அல்லது 15
எண்ணெய் அல்லது நெய்  
தேவைகேற்ப

உப்பு
தேவையான அளவு
தண்ணீர்
4 அல்லது 5 கப்



செய்முறை:

1. ஒரு வாணலியில் அரிசி,பருப்பு இரண்டையும் சேர்த்து வருக்கவும். அரிசி லேசாக பொரிந்ததும் இறக்கவும்.
2. ப்ரெஶர் குக்கரில் பழைய அரிசியாக இருந்தால் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இல்லையென்றால் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரிசி, பருப்பு, உப்பு 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
3. வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி மிளகு, சீரகம், சிகப்பு மிளகாய், முந்திரி, துருவிய இஞ்சி, பெருங்காயம், சேர்த்து தாளிக்கவும்.
4 வேக வைத்த அரிசி,பருப்பு இரண்டையும் நன்றாக குழைத்து கொள்ளவும். தாளித்தவைகளுடன் சேர்த்து சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

வியாழன், 24 ஏப்ரல், 2014

ஸ்டஃப்ட் இட்லி


தேவையான பொருட்கள்:
கேரட்
1
பீன்ஸ்
10
உருளைகிழங்கு
1
இஞ்சி பூண்டு விழுது
1/.4 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள்
1/.4 டீ ஸ்பூன்
உப்பு
1/.4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்
1/.4 டீ ஸ்பூன்
இட்லி மாவு
தேவையான அளவு

செய்முறை:
1. கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு மூன்றையும் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
2. சூடு ஆரிய பிறகு மூன்றையும் தண்ணீர் இல்லாமல் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. பிறகு மசித்த காய்கறி விழுது, மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
5. இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி, காய்கறி மசாலா விழுதை வைத்து இட்லி மாவை ஊற்றவும்.
6. 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

வெந்தய கீரை குழம்பு


தேவையான பொருட்கள்:
வெந்தய கீரை
1 கட்டு
துவரம் பருப்பு
1/4 கப்
பாசி பருப்பு
1/4 கப்
எலுமிச்சை சாறு
1/2 மூடி

அரைத்து கொள்ளவும்:
தேங்காய்
1 டேபிள் ஸ்பூன்
சீரகம்
1/4 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய்
4
உப்பு
1/2 டீ ஸ்பூன்

செய்முறை:
1. துவரம் பருப்பு, பாசி பருப்பு இரண்டையும் ஒன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
2. மிக்ஸீயில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
.3. ஒரு பாத்திரத்தில் வெந்தய கீரையுடன் சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
4. கீரை வெந்த உடன் வேக வைத்த பருப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
5. கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

புதன், 26 மார்ச், 2014

முந்திரி பர்ஃபி (காஜு கத்லி)


தேவையான பொருட்கள்:
முந்திரி
1 கப்
சர்க்கரை
1/2 கப்
தண்ணீர்
1/4 கப்

செய்முறை:
1. மிக்ஸீயில் முந்திரியை நன்றாக பவுடர் செய்துக் கொள்ளவும்.
2. ஒரு நான் ஸ்டிக் வாணலியில் சர்க்கரை தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் பொடி செய்த முந்திரியை சேர்த்து நன்றாக கிளரவும்.
3. குறைந்த அனலில் வைத்து மாவு நல்ல உருண்டை பதம் வரும் வரை கிண்டவும்.
4. பட்டர் பேப்பர் (அல்லது) ஃபாய்ல் பேப்ப்பாரில் முந்திரி பேஸ்டை கொட்டவும்.
5. சூடு ஆறியதும் சப்பாத்தி கட்டையால் தேய்க்கவும்.
6. டைமண்ட் சேப்பில் கட் செய்தால் முந்திரி பர்ஃபி தயார்.