Translate

புதன், 20 மார்ச், 2013

ஆலு பாலக்



தேவையான பொருட்கள்:
பாலக் கீரை
1 (அல்லது) 2 கட்டு
வெங்காயம்
2 பெரியது
தக்காளி
2
இஞ்சி பூண்டு விழுது
1 டீ ஸ்பூன்
உருளைகிழங்கு
2
உப்பு
1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்
11/2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி தூள்
1/2 டீ ஸ்பூன்
சீரகத் தூள்
1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள்
1/2 டீ ஸ்பூன்
வெல்லம்
சிறிதளவு
சோம்பு
1 டீ ஸ்பூன்
வெண்ணெய்
1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1.  பாலக் கீரையை சிறிது தண்ணீர் ஊற்றி தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி நறுக்கி தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.
3. வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
4. உருளைகிழங்கு சிறிதாக நறுக்கி வதக்கவும். நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் அரைத்த வெங்காய விழுதை சேர்க்கவும்.
5. ஓரளவு வாதங்கியதும் தக்காளி விழுதை சேர்க்கவும். வெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
6. வேக வைத்த கீரை மிக்ஸீயில் அரைத்து வதங்கிய விழுதுடன் சேர்க்கவும்.
7. இப்பொழுது கொத்தமல்லி தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், உப்பு, மிளகாய் தூள் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
8. வேண்டுமென்றால் ப்ரேஷ் க்ரீம் சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக