Translate

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

அரிசி பணியாரம்



தேவையான பொருட்கள்:
பச்சரிசி
1 கப்
புழுங்கலரிசி
1 கப்
உளுத்தம் பருப்பு
1/2 கப்
பச்சை மிளகாய்
8
உப்பு
2 டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம்
2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
கறிவேப்பில்லை
1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை
1 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா
1/4 டீ ஸ்பூன்
கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. பருப்பை தனியாக 1 மணி நேரமும், அரிசி வகைகளை ஒன்றாக 2 மணி நேரமும் ஊற வைக்கவும்.
2. பருப்பை முதலில் நுரைக்க அரைத்துக் கொள்ளவும்.
3. அரிசியுடன் பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. அரிசியையும், பருப்பு விழுதையும் கலந்து உப்பு சேர்த்து மறுநாள் காலைவரை வைக்கவும்.
5. வெங்காயம், கடலை பருப்பு, கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை சமையல் சோடா இவற்றை மாவோடு சேர்க்கவும்.
6. நன்றாகக் கலந்து பணியாரக் கல்லில் ஊற்றவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக