Translate

வெள்ளி, 24 மே, 2013

தேங்காய் தோசை


தேவையான பொருட்கள்:
பச்சரிசி
1 கப்
புழுங்கலரிசி
1 கப்
தேங்காய்
1/2 கப்
சிகப்பு மிளகாய்
7
சீரகம்
1/4 டீ ஸ்பூன்
உப்பு
11/2 டேபிள் ஸ்பூன்
புளி
நெல்லிக்காயளவு
வெல்லம்
1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. இரண்டு அரிசியையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். கடலை பருப்பை தனியாக சிறிது தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.
2. கிரைண்டரில் துறுவிய தேங்காய், மிளகாய், சீரகம்,வெல்லம், ஊற வைத்த அரிசியை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. புளித் தண்ணீர் சேர்த்து ரவா தோசை பதத்திற்கு மாவை நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
4. தோசை ஊற்றுவதற்கு முன் ஊற வைத்த கடலை பருப்பை வேண்டுமென்றால் கறிவேப்பில்லை சேர்த்து தோசை சுடவும்.
5. தோசையை மூடி வைத்து ஒரு பக்கம் சுட வைத்தாலே போதுமானது. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக