Translate

புதன், 8 மே, 2013

புதினா சட்னி



தேவையான பொருட்கள்:
புதினாத் தழை
1 சிறு கட்டு
உளுத்தம் பருப்பு
1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்
5
உப்பு
1/2 டீ ஸ்பூன்
தேங்காய்
1/2 கப்
கடுகு
1/4 டீ ஸ்பூன்
எண்ணெய்
சிறிதளவு

செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி  கழுவிய புதினாத் தழை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
2. உளுத்தம் பருப்பையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
3. சூடாறிய பிறகு மிக்ஸீயில் தேங்காய், உப்பு, வதக்கிய புதினா, பச்சை மிளகாய், வறுத்த உளுத்தம் பருப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
4. எண்ணெய் காய வைத்து, கடுகு சேர்த்து தாளித்து சட்னி மேல் ஊற்றவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக