Translate

வெள்ளி, 22 நவம்பர், 2013

மொறு மொறு காளிஃப்ளவர்

தேவையான பொருட்கள்:

காளிஃப்ளவர்
1
மைதா மாவு
டீ ஸ்பூன்
சோள மாவு (வெள்ளை)
4 டீ ஸ்பூன்
உப்பு
1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்
1/4 டீ ஸ்பூன்
மிளகு தூள்
1/4 டீ ஸ்பூன்
கரம் மசாலா
1/4 டீ ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது
1/4 டீ ஸ்பூன்
தண்ணீர்
சிறிதளவு
எண்ணெய்
பொறிப்பதற்க்கு

செய்முறை:
1. காளிஃப்ளவரை சுடு தண்ணீரில் ஒரு நிமிடம் போட்டு எடுக்கவும்.
2. சோளமாவு, மைதா மாவு, கரம் மசாலா தூள், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது இவை அனைத்தும் சிறிது தண்ணீர் ஊற்றி நல்ல கெட்டியான பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
3. காளிஃப்ளவருடன் கலந்த மாவை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவுடன் கலந்த காளிஃப்ளவரை ஒவ்வொன்றாக போட்டு பொறித்து எடுக்கவும்.
5. பொறித்து எடுத்ததை ஒரு நிமிடம் கழித்து மறுபடியும் எண்ணெயில் போட்டு எடுத்தால் நல்ல மொறு மொறு காளிஃப்ளவர் தயார்.

6. தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக