Translate

வெள்ளி, 6 டிசம்பர், 2013

பீர்கங்காய் கூட்டு


தேவையான பொருட்கள்:
பீர்கங்காய்
1
பாசி பருப்பு
1/2 கப்
பூண்டு
10 பல்
தேங்காய்
1/2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி
1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம்
1/4 டீ ஸ்பூன்
உப்பு
1/4 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு
1/4 டீ ஸ்பூன்
சிவப்பு மிளகாய்
3
எண்ணெய்
தாளிக்க

செய்முறை:
1. பீர்கங்காய் சிறிது தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக செய்துக் கொள்ளவும்.
2. பாசி பருப்பை  மஞ்சள் தூள் சேர்த்து தனியாக ப்ரெஸர் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் பூண்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி பீர்கங்காயுடன் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
4. மிக்ஸீயில் தேங்காய், பச்சரிசி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
5. பீர்கங்காய் வெந்த உடன் பாசி பருப்பு, அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
6. உளுத்தம் பருப்பு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து எண்ணெய் ஊற்றி தாளித்து கூட்டில் சேர்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக