Translate

புதன், 11 டிசம்பர், 2013

கேரட் ப்ரெட் சேண்விட்ஜ்


தேவையான பொருட்கள்:
ப்ரெட்
1 பாக்கெட்
வெங்காயம்
2 (பெரியது)
தக்காளி
2
கேரட்
1 (அல்லது) 2
உப்பு
1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்
1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள்
1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை
சிறிதளவு
கொத்தமல்லி
சிறிதளவு
எண்ணெய்
தேவையான அளவு

செய்முறை:
1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
2. வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
3. தக்காளி நன்றாக வதங்கியதும் துறுவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.
4. உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
5. தோசை கல்லில் ப்ரெடை இரு பக்கமும் எண்ணெய் அல்லது வெண்ணெய் தேய்த்து சுடவும்.
6. இரு பிரேடுக்கு நடுவில் மசாலாவை வைத்து சாப்பிடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக