Translate

வியாழன், 12 டிசம்பர், 2013

தக்காளி கொத்ஸு


தேவையான பொருட்கள்:
வெங்காயம்
2 (பெரியது)
தக்காளி
2
உப்பு
1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்
1/2 டீ ஸ்பூன்
கடலை மாவு
11/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்
1/4 டீ ஸ்பூன்
கடுகு
1/4 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு
1/4 டீ ஸ்பூன்
கடலை பருப்பு
1/4 டீ ஸ்பூன்
தண்ணீர்
தேவையான அளவு

செய்முறை:
1. தக்காளியை சிறிது தண்ணீர் ஊற்றி தோல் உரியும் வரை வேக வைக்கவும்.
2. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.
3. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும், வதங்கியதும் வேக வைத்த தக்காளியை தோல் உரித்து நன்றாக பிசைந்து சேர்க்கவும்.
4. கடலை மாவுடன் சிறிது மஞ்சள் தூள் தண்ணீர் கலந்து சேர்க்கவும்.
5. உப்பு, மிளகாய் தூள் சாம்பார் பதத்திற்க்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
6. கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
7. தோசை, இட்லிக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக