Translate

திங்கள், 27 ஜனவரி, 2014

வெங்காயம், தக்காளி சட்னி


தேவையான பொருட்கள்:
தக்காளி
2
வெங்காயம்
2 (பெரியது)
உப்பு
1/2  டீ ஸ்பூன்
சிவப்பு மிளகாய்
4
வரகொத்தமல்லி
1/4 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு
1/4 டீ ஸ்பூன்

செய்முறை:
1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, வரகொத்தமல்லி, சிவப்பு மிளகாய் மூன்றையும் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
2. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. இவை அனைத்தும் சூடாறிய பிறகு மிக்ஸீயில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
4. இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

1 கருத்து: